புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி  இருவர் பலி

தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலியாயினர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2013, 4:30 am

முருகன்

தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலியாயினர்.

தருமபுரி கிருஷ்ணகிரி சாலையில் ஏரிங்கலூர் அருகே நேற்று இரவு பேருந்துக்காக சாலையில் நடந்து சென்றனர் மாலையன், ரமேஷ் ஆகியோர். மாலையன் (45) ஏரிங்கலூரைச் சேர்ந்தவர். இவர் தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது மைத்துனர் ரமேஷ்(27) அருகில் உள்ள கங்கணம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

இருவரும் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், மாலையன் சம்பவ இடத்திலேயே பலியானார். ரமேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கே இன்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.